புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இதில் பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் பலர் அடித்து செல்லப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.