டெல்லி: மராட்டியத்துக்கு வந்திருக்க வேண்டிய பல முதலீடுகளை குஜராத்துக்கு மோடி திருப்பி விட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். மராட்டிய மாநிலத்தை பிரதமர் மோடி வஞ்சித்துவிட்டதாக செய்தித்தாள்களில் வந்ததைத்தான் ராகுல் காந்தி பேசியுள்ளார். பத்திரிகைகளில் வெளியான அதே குற்றச்சாட்டை கூறிய ராகுல் காந்தி பற்றி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் செய்வது ஏன்? அனைவருக்குமான வளர்ச்சி பற்றி பேசும் மோடி அனைத்து மாநில வளர்ச்சியை ஏற்படுத்த ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மராட்டியத்துக்கு மோடி பாரபட்சம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
0