நந்தேட்: மகாராஷ்டிரா மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் நாந்தேட் தொகுதி எம்பி வசந்த்ராவ் சவான் (70), கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி வசந்த்ராவ் சவான் காலமானார். பஞ்சாயத்து உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வசந்த்ராவ் 2002ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நைகோன் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். கடந்த ஆண்டு முதல் முறையாக நாந்தேட் மக்களவை தொகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.