மராட்டியம்: மராட்டியம் தாண்ட் நகரிலிருந்து புனே சென்ற ரயில் கழிவறையில் பீடி நெருப்பால் தீப்பிடித்தது எரிந்தது. யவத் என்ற ஊரை ரயில் கடந்தபோது கழிவறையில் தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் கழிவறையில் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பயணி ஒருவர் அணைக்காமல் வீசிய பீடியில் இருந்து தீப்பிடித்ததாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கழிவறையில் இருந்து வந்த புகையால் ரயில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.