மும்பை: மகாராஷ்டிராவில் சிறுமியை பலாத்காரம் செய்து சிகரெட்டால் சூடுவைத்த கொடூரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் கும்ரே (29). இவன் கடந்த 2 ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்து வந்தார். அவ்வப்போது பாலியல் பலாத்காரமும் செய்து வந்துள்ளான். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன், அந்த சிறுமியை கணேஷ் கும்ரே பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் அந்த சிறுமிக்கு சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளான், மேலும் அந்த சிறுமிக்கு மொட்டையடித்து விட்டார். இதையறிந்த அப்பகுதியினர் போலீசில் புகார் அளித்தனர்.
அதையடுத்து குற்றவாளி கணேஷ் கும்ரேவை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஐபிசி-யின் 363, 376, 354, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது. இந்த கொடூர சம்பவம் குறித்து மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொடூர குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளி என்பதால், அவருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். சிறுமிக்கு உரிய மருத்துவ உதவிகள் செய்யப்படும்’ என்றார்.