டெல்லி: மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். ஐந்தே மாதங்களில் பட்னவிஸ் போட்டியிட்ட நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 8% அதிகரித்தது எப்படி? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மராட்டிய முதல்வரின் தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்ததாக வெளியான செய்தியை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார்.
மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் முறைகேடு: ராகுல் காந்தி பரபரப்பு புகார்
0