லக்னோ: மகா கும்பமேளா மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவுக்காக ரூ.1,500 கோடியை மட்டுமே மாநில அரசு ஒதுக்கியதாகவும் முதல்வர் தெரிவித்தார். மகா கும்பமேளாவை ஒட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement


