போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உஜ்ஜைனி, மண்டலேஸ்வர், ஓம்காரேஸ்வர் உள்ளிட்ட நகரங்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், புனித தலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் மபி அரசு புதிய கலால் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, உஜ்ஜைனி உட்பட 17 புனித நகரங்களில் உள்ள 19 பகுதிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்படும். அதே சமயம் மற்ற இடங்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பீர், ஒயின் மற்றும் அதிகபட்சம் 10 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பானங்கள் மட்டுமே விற்பதற்கு ‘குறைந்த ஆல்கஹால் மதுபான பார்கள்’ புதிதாக திறக்கப்படும்.
மபி அரசின் புதிய கலால் கொள்கை 19 புனித தலங்களில் மது விலக்கு மற்ற இடங்களில் பீர் பார் திறப்பு
0
previous post