சென்னையை அடுத்த மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு நடத்தி வருகிறார். சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் ராதாகிருஷ்ணன், அந்த பகுதியில் ஆய்வு நடத்தினார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்களை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் ஆணையர் ஆய்வு நடத்தி வருகிறார்.