Monday, April 15, 2024
Home » மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: நகரமன்ற தலைவர் வழங்கினார்

மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: நகரமன்ற தலைவர் வழங்கினார்

by Ranjith

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை நகரமன்ற தலைவர் மலர்விழி குமார் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியை பானுமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு, 11ம் வகுப்பு படிக்கும் 456 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர், அவர் பேசுவையில், ‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ – மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே கல்வியில் முதல் மாநிலமாக திகழ செய்துள்ளார். இந்த வாய்ப்புகளை மாணவிகளாகிய நீங்கள் பயன்பெற வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் மிகப்பெரிய அதிகாரிகளாக உயர வேண்டும். கல்வியில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும்’ என்றார்.  சைக்கிள்களை பெற்றுக்கொண்ட மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் குமார், பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் கிரி ராஜகுமாரி, உறுப்பினர் தனசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

sixteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi