Thursday, February 22, 2024
Home » மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்திற்கு தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

by Suresh

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளதாகவும், பல சமூகத்தினரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்து புத்தகங்களை பறிமுதல் செய்து கடந்த 2015ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் கடந்த 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் ெசய்த மனுவில், புத்தகத்தில் சாதி ரீதியாக எதுவும் இல்லை. புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன் மற்றும் தனபால் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் நிவாரணம் வேண்டி குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

five + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi