Friday, July 19, 2024
Home » மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் விதிமீறல்கள் நடந்திருப்பதை உறுதி செய்து நீதிபதி ஜோதிமணி குழு அறிக்கை: நீர்வளத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் விதிமீறல்கள் நடந்திருப்பதை உறுதி செய்து நீதிபதி ஜோதிமணி குழு அறிக்கை: நீர்வளத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

by Karthik Yash

சென்னை: மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் வீதிமீறல்கள் நடந்திருப்பதை உறுதி செய்து நீதிபதி ஜோதிமணி குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதி மீறல்கள் தொடர்பாக அறிக்கையை, சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, ஓய்வு பெற்ற நீதியரசர் ப.ஜோதிமணி தலைமையிலான குழு நேற்று சமர்ப்பித்தது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் விதிமீறல் குறித்து ஏற்கனவே 3 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. 3 குழுக்கள் அளித்த ஆய்வறிக்கையை ஆராய்ந்து அரசுக்கு தக்க பரிந்துரை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ப.ஜோதிமணி தலைமையில், பாஸ்கரன் கூடுதல் பொது இயக்குநர் (ஓய்வு) இந்திய புவியியல் ஆய்வு கழகம் மற்றும் சுதர்சனம் கூடுதல் இயக்குநர் (ஓய்வு), புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியோர்களை நிபுணர் உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட சிறப்புக் குழு கடந்தாண்டு பிப்ரவரி 20ம் தேதி அமைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற வீதிமீறல்கள் குறித்து ஆராய்ந்த இந்த குழுக்கள் தனது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின் அடிப்படையில் 83 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) பணீந்திர ரெட்டி, மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவணவேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi