சென்னை: மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து நிலையத்துக்கு அருகில் ரூ.315 கோடி மதிப்பில் 14.16 ஏக்கரில் அமைகிறது டைடல் பூங்கா; மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் ரூ.289 கோடி மதிப்பில் 9.9 ஏக்கரில் டைடல் பூங்கா அமைகிறது. 2 டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த நிலையில் இன்று முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை, திருச்சி டைடல் பூங்கா – இன்று அடிக்கல்
0
previous post