மதுரை: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை
0