சென்னை : கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழுள்ள இளைஞர்கள் 100 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குவர். வழிப்பறி நோக்கத்தோடு கத்தியுடன் சுற்றி திரிந்தது, வணிகர்களை மிரட்டி மாமுல் கேட்டது போன்ற குற்றங்கள் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.