நெல்லை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.150 ேகாடி மதிப்பிலான தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில் வாசல்படியில் பயணித்த 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். மதுரை கோட்டத்தில் 80 சதவீத ரயில் பாதைகளில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் 94.7 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 69.75 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை கோட்டத்தில் ரயில்வே சொத்துக்களை திருடிய 70 வெளிநபர்கள் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்டத்தை மீறிய 3380 நபர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.19.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு ஓடி வந்த 125 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு உள்ளனர்.
பயணிகள் தொலைத்த ரூ.56.60 லட்சம் மதிப்புள்ள உடமைகள் ரயில்வே பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள சட்டப்படி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் வாசல் படியில் பயணித்த 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.