சென்னை: மதுரையில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாடலை வெளியிட்டார். இதில் பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து வரும் 21ம் தேதி சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வர வாய்ப்புள்ளது. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யான் வருகிறார். அவர் 15ம் தேதியில் இருந்து விரதம் இருக்கிறார். இது அரசியல் கட்சி மாநாடு கிடையாது. அரசியல் பேச மாட்டார்கள். மேடையில் தலைவர்கள் மட்டும் இருப்பார்கள். நாங்களே மேடையில் இருப்போமா என்று தெரியாது என்றார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பவன் கல்யாண் பங்கேற்கின்றனர்: நயினார் நாகேந்திரன் பேட்டி
0