மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சுந்தரேஸ்வரர் நிகழ்த்திய திருவிளையாடல்களை குறிக்கும் ஆவணி மூலத் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ‘கருங்குருவிக்கு உபதேசம் செய்யும் லீலை’ நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் சுவாமியுடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் தங்கச்சப்பரத்தில் முத்து செட்டியார் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்கு சுந்தரேஸ்வரர் நாரைக்கு முக்தி கொடுத்த லீலையை குறிக்கும் விதமாக சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.