மதுரை : மதுரை மாவட்ட நூலகத்தை புனரமைக்க கோரிய வழக்கில் இயக்குநர் அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. நூலகத்தை புனரமைக்க ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பு கோர்ட்டில் தகவல் அளித்துள்ளது. நூலகத்தை முழுமையாக புனரமைத்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்.? என்றும் நூலகம் எவ்வாறு புனரமைக்கப்படவுள்ளது? அது தொடர்பான திட்டம் என்ன? என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.