மதுரை: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பழைய பேருந்துகளை மாற்ற வலியுறுத்தி மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.