மதுரை: மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஆதீனம் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தொடர்ந்து பேசி பொது அமைதியை சீர்குலைத்து வருகிறார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஆதீனத்தில் இருந்து அவர் வௌியேற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்பினர் இணைந்து மதுரை ஆதீன மடத்தை இன்று முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘வரலாற்று சிறப்புமிக்க மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து ஞானசம்பந்த தேசிகரை நீக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடுவதற்காக கிளம்பியபோது அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 50 பேரை கைது செய்தனர்.