மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகள் எப்பொழுது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசு தரப்பில் எழுத்து பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காலதாமதம் ஆவதற்கு கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? -ஐகோர்ட் கிளை
previous post