மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இலவசமாக வழங்கினார். கோவில்பட்டியில் சத்தியபாமா திரையரங்கில் காலை காட்சிக்கான அனைத்து (550) டிக்கெட்டுகளை கடம்பூர் ராஜூ முன்பதிவு செய்தார். மதுரையில் ஆக.20-ல் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.