மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 8 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். சங்க பதிவு சட்டத்தின்படி 10 ஆண்டுகள் புதுப்பிக்காவிடில் சங்க பதிவில் இருந்து சங்கம் நிரந்தரமாக நீக்கப்படும். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் பதிவு நீக்கப்படும் நிலையில் இருந்ததை அடுத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அமைச்சர் சாமிநாதன் தொடர் முயற்சியால் சங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.