டெல்லி: மதுரை தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் விதித்திருந்த தடையை நீக்கியது. புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை – தூத்துக்குடி சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
0