மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அஜித்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக அஜித்குமார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அஜித்குமாரை அவரது குடும்பத்தினர் சந்திக்காததால் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.