மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டார். விக்னேஸ்வரனின் தந்தை முத்தையாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மதனுக்கும் 2 ஆண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. மீண்டும் நவம்பர் 31-ம் தேதி தீபாவளியன்று முத்தையாவிற்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்தையா மகன் விக்னேஸ், மதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்துள்ளன. சம்பவம் தொடர்பாக மதன் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து விக்னேஸ்வரனை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.