மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் புதிய ஆணையர் மதுபாலன் பதவி ஏற்றார். மதுரை மாநகராட்சியில் அடிக்கடி ஆணையர் மாற்றப்படுவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.