மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தயாரிக்கும் மண்டபத்தை வேறு இடத்துக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்துக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.