மதுரை: இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி செப்டம்பர். 11ல் மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்.11ம் தேதி மதுக்கடைகள் மதுபான கூடங்கள் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.