சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு வாழ்த்துகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஆளுநர் வருகையை ஒட்டி காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் பெரியாரின் வைக்கம் போராட்டம் பற்றி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஆளுநர் வருகை! “பெரியார் நாடகம்” என்னவொரு பொருத்தம்!. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற மேதமையைப் போற்றுவோம். கீழ்மையையும் சிறுமையையும் துணிவுடன் எதிர்கொள்வோம் என்று அவர் கூறினார்.