மதுரை: கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் வளாகம் பின்புறம் மதுரை-சென்னை நெடுஞ்சாலையில் இருபுறமும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை ஐகோர்ட் நீதிபதி விவேக்குமார் சிங் கருத்து தெரிவித்துள்ளார். தேவகோட்டை வள்ளி விநாயகர் பூரணி மாசடைவது குறித்து நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: ஐகோர்ட் கிளை வேதனை
0