மதுரை: மதுரை வலையங்குளத்தில் அதிமுக மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் நடக்கும் முதல் மாநாடு ஆகும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அதிமுக மாநாடு நடைபெறுகிறது. 60 ஏக்கர் பரப்பளவில் அதிமுக மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பழனிசாமி கொடியை ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவி மாநாட்டை தொடங்கினார்.
மாநாட்டு மேடையில் பிரமாண்ட டிஜிட்டல் திரையும் 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுடன் பிரமாண்ட நுழைவாயில் அமைப்பு. 60ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மேடையும் சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 31ஆண்டு கால வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சிக்கு பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கவியரங்கம்,கருத்தரங்கம்,பட்டிமன்றம் உள்ளிட்டவற்றுடன் 12மணிநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெறும். மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையில் சிறப்புரை ஆற்றுகிறார். எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன் 10-க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன