மதுரை: மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. மல்லம்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் 10 ஆண்டுகளாக பால்பண்ணை நடத்தி வருகிறார். 2 ஆண்டுக்கு முன் தனியார் வங்கியில் ரூ.3 கோடி கடன், இதர வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியதாக தகவல் வெளியாகியது. தொழில் நஷ்டத்தால் கடந்த சில மாதங்களாக கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். கடன் தவணை கேட்டு வங்கி ஊழியர்கள் அடிக்கடி தொந்தரவு செய்ததாக ராஜபாண்டி உறவினர்கள் புகார் தெரிவித்தனர். வங்கி தரப்பில் ராஜபாண்டியின் பால்பண்ணை, வீடு உள்ளிட்டவற்றை ஐப்தி செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ராஜபாண்டி திடீரென காணாமல் போன நிலையில் மதுரை பேருந்து நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் பால்பண்ணை அதிபர் தற்கொலை..!!
0