மதுரை: மதுரையில் உணவகத்தில் வாங்கிய சிக்கனில் வண்டு இருந்த புகாரில் உணவகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ல் சட்டக்கல்லூரி மாணவிகள் வாங்கிய சிக்கனில் வண்டு இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் எழுந்தது. புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தில் சோதனை நடத்தினர். உணவகத்தில் உணவுகளை திறந்து வைத்திருந்தது, சமையலறை அசுத்தமாக இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையில் சிக்கனில் வண்டு: உணவகத்துக்கு நோட்டீஸ்
74