மதுரை: மத மோதலை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசி வருவதாக கூறி மதுரை ஆதீனத்துக்கு எதிராக மத நல்லிணக்க கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். பூங்காவில் இருந்து மதுரை ஆதினம் மடத்திற்கு பேரணையாக செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ஆதினம் மடம் அருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை ஆதீனத்துக்கு எதிராக மத நல்லிணக்க கூட்டமைப்பினர் போராட்டம்
0