மதுரை: ஜாமின் கோரிய இருவர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு தலா ரூ.5,000 செலுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல், சட்டவிரோத மதுபான விற்பனை வழக்கில் தஞ்சையை சேர்ந்த முருகேசன், நெல்லையை சேர்ந்த பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி இரு வேறு மனுக்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். கைதான இருவரும் தலா ரூ.5,000 வீதம் கலைஞர் நூற்றாண்டு நூலக வங்கி கணக்கில் செலுத்த நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.