Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மதுரை மாநகரில் வீரன் அழகு முத்துக்கோனுக்கு வெண்கல சிலை நிறுவப்படும்: அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

மதுரை, ஏப். 21: சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகு முத்துக்கோனுக்கு, மதுரையில் முழு உருவ வெங்கலச் சிலை அமைத்து தரப்படும் என, அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை, ஆலாத்தூரில் உள்ள மண்டபத்தில் மதுரை கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட யாதவர் சமுதாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, யாதவ சமுதாயத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, அவர்களின் முக்கிய கோரிக்கையாக சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்பதாக உள்ளது. மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன், மதுரையில் வீரன் அழகுமுத்துக்கோனுக்கு பிரமாண்ட முழு உருவ வெங்கலச்சிலை அமைக்கப்படும்’’ என்றார்.