சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலைபடிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும். அதாவது ஒவ்வொரு பிரிவின் கீழும் 1 இலவச இருக்கைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிரிவு 1: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3d of seats) பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற மாணவர்கள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 2: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3 of seats) முதல் பட்டதாரி மாணவர்கள், ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் முக்கிய பாடங்களில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பிரிவு 3: மூன்றில் ஒரு பங்கு இருக்கைகள் (1/3d of seats) முக்கிய பாடங்களில் 80% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி (MERIT) அடிப்படையில் வழங்கப்படும்
இலவசக் கல்வித்திட்டத்தில் சேரும் மாணவர்கள் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 க்குள் இருக்க வேண்டும். பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாவது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சமீபத்திய வருமான சான்றிதழ் நகல்கள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்