டெல்லியில் மதராசி கேம்ப் மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினால் உதவி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாழ்வாதாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களுக்கு அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் மூலம் உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.