சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதிபதி கே.சாமிதுரை (91) மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். எளிய பின்புலத்தில் பிறந்து கடும் உழைப்பால் ஐகோர்ட் நீதிபதியாகி சட்டத்தின் துணையோடு சமூக நீதியை நிலைநாட்டியவர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.