போபால்: மத்திய பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸிடம் எந்தத் திட்டமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மத்திய பிரதேச தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும். பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சியால் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்று மோடி தெரிவித்தார்.