புதுடெல்லி: மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு வெளியானது. சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை ேதர்தல் வரும் நவ. 7ல் தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ. 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 144 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மத்தியப் பிரதேச முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ஜிது பட்வாரி, ஜெயவர்தன் சிங், சட்டப்பேரவை உறுப்பினர் விஜயலட்சுமி சாதோ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ெதாடர்ந்து அடுத்தகட்டமாக மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 88 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை நேற்றிரவு காங்கிரஸ் வெளியிட்டது.