செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. சோத்துப்பாக்கத்தில் ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.2.60 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.