மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெளியம்பாக்கம் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.11.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் மற்றும் எலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தரை அமைக்கப்பட்டது. இதனை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.