மதுராந்தகம்: மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ளபிடிஓபணியிடத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் முக்கிய அலுவலகமாக மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் உயர் அதிகாரிகளாக பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர்ஸ் என அழைக்கப்படும் பிடிஒக்கள் இருவர் இருந்து வருகின்றனர். இவர்கள் வட்டார ஊராட்சிபிடிஓமற்றும் கிராம ஊராட்சிபிடிஓஎன அழைக்கப்படுகின்றனர். இந்த இருவரின் மூலமாகத்தான் அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம ஊராட்சிபிடிஓபணியிடம் காலியாக உள்ளது.
இதனால், பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட 58 ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு நல பணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகள் ஆகியவற்றை இவர்கள் இருவரும் களப்பணி ஆய்வு செய்வார்கள்.
அப்போது, இருவரும் 58 ஊராட்சிகளில் சரிபதியாக பிரித்துக் கொண்டு களப்பணி ஆய்வு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், தற்போது ஒருவர் மட்டுமே இருப்பதால் இந்த 58 ஊராட்சிகளையும் அவர் பார்வையிடுவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால், பணிகள் வேகமாக நடைபெற இயலாத சூழ்நிலையும் உள்ளது என்கின்றனர்.
மேலும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் போன்றவற்றை செயல்படுத்தக்கூடிய கிராம ஊராட்சிபிடிஓஇல்லாத சூழ்நிலையில் 100 நாள் வேலை பணியாளர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே, உயர் அதிகாரிகள் உடனடியாக மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ளபிடிஓபணியிடத்தை நிரப்ப வேண்டும் என மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.