இடார்சி: மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்திற்குள் நுழையவிருந்த ராணி கம்லாபதி-சஹர்சா சிறப்பு பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் நேற்று மாலை 6.10 மணி அளவில் தடம் புரண்டன. இந்த ரயில் நடைமேடை எண் 2 க்குள் நுழையவிருந்தபோது அதன் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன. தடம் புரண்ட போது 5 கி.மீட்டர் வேகத்தில் ரயில் இயங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அங்கு பல மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.