அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள் உட்பட 246க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் விமானம் மோதி வெடித்ததில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விபத்தில் பலியாகி உள்ளார்.
இதுகுறித்து ஆச்சரியப்படுத்தும் வகையில், தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு, 1206 என்ற எண் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதி வந்துள்ளார். அவரது வீட்டில் ஸ்கூட்டர் முதல் கார்கள் வரை அனைத்து வாகன பதிவு எண்ணும் கூட 1206 தான். இந்த எண்ணை தனது அதிர்ஷ்டமாக விஜய் ரூபானி கருதினார். ஆனால் விதியை யாராலும் வெல்ல முடியாது என்பது போல், பல ஆண்டுகளாக விஜய் ரூபானியின் அதிர்ஷ்ட எண்ணாக இருந்த 1206, அவரது மரணத்திற்கான நாளாகவும் மாறியுள்ளது.
ஏனெனில் விஜய் ரூபானி ஜூன் 5ம் தேதி லண்டன் சென்றிருக்க வேண்டியது. ஆனால் லூதியானா மேற்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக தனது பயணத்தை அவர் ஒத்திவைத்ததும், ஜூன் 12ம் தேதி பயணத்தை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.