சென்னை: மத்திய கிழக்கு அரபிக் கடலில் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.