சென்னை: ஜாபர்கான்பேட்டை கண்ணகி தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் செல்போனில் தனிநபர் கடன் வேண்டுமென்றால் இந்த நம்பரை அணுகவும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணை அருணாச்சலம் தொடர்பு கொண்டு பேசிய போது குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி 6 தவணைகளாக ரூ.1,24,993 வங்கி கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார். மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது பதிலளிக்காததால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி
previous post